மேலைத்தேய முறையில் சில்லி பிஷ் சமையல் | Chilli Fish Recipe ! சமைத்துப் பாருங்கள்....

#Cooking #Fish #Fry
மேலைத்தேய முறையில் சில்லி பிஷ் சமையல் | Chilli Fish Recipe ! சமைத்துப் பாருங்கள்....

தேவையான பொருட்கள்

  • 250 கிராம் மீன்
  • 1/2 கப் மைதா
  • 1/2 கப் சோள மாவு
  • 1 தேக்கரண்டி பேக்கிங் பவுடர்
  • 2 தேக்கரண்டி சோயா சாஸ்
  • 2 மேஜைக்கரண்டி செலரி, பொடியாக நறுக்கப்பட்ட
  • 1 தேக்கரண்டி மிளகு
  • உப்பு
  • எண்ணெய்
  • for garnishing ஸ்ப்ரிங் ஆனியன்

சாஸ் தயாரிக்க:

  • 1 மேஜைக் கரண்டி இஞ்சி, நறுக்கப்பட்ட
  • 1 மேஜைக் கரண்டி பூண்டு, நறுக்கப்பட்ட
  • 1 மேஜைக் கரண்டி பச்சை மிளகாய், நறுக்கப்பட்ட
  • 4 மேஜைக் கரண்டி சோயா சாஸ்
  • 5 மேஜைக் கரண்டி டொமேடோ சாஸ்
  • 1 மேஜைக் கரண்டி சில்லி சாஸ்
  • 1 மேஜைக் கரண்டி சோள மாவு

எப்படி செய்வது

  1. மீனை துண்டாக வெட்டி கொள்ளவும். ஒரு பௌலில் சோள மாவு, மைதா, பேக்கிங் பவுடர், சோயா சாஸ், மிளகு, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  2. அடுப்பில் கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் வெட்டி வைத்த மீனை மசாலா கலவையில் தொட்டு எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வரும்வரை பொரித்து எடுக்கவும்.

சாஸ் தயாரிக்க:

  1. அடுப்பில் தவா வைத்து அதில் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும் அதில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும் அத்துடன் சோயா சாஸ், சில்லி சாஸ் மற்றும் டொமேடோ சாஸ் சேர்த்து கிளறவும்.
  2. அத்துடன் சோளமாவு கரைசலை சேர்த்து நன்கு கலக்கவும். கொதி நிலை வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.
  3. மீனை பரிமாறும் போது அதன் மேல் இந்த சாஸை ஊற்றி பரிமாறவும். இறுதியாக அதன் மேல் நறுக்கி வைத்த ஸ்ப்ரிங் ஆனியனை தூவி அலங்கரி க்கவும்.
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!